பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Wednesday, September 28, 2005

பணம் காய்க்கும் பங்குகள் - 1

நல்ல நிறுவனங்களின் பங்குகள், பணம் காய்க்கும் மரங்கள். நல்ல நிறுவனங்களின் பங்குகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு நீண்ட காலம் பயணம் செய்தால் அந்தப் பங்குகளுடன், நம்முடைய பணமும் வளருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அத்தகைய சில நல்லப் பங்குகளை "பணம் காய்க்கும் பங்குகள்" என்ற தலைப்பில் கூறலாம் என்று நினைக்கிறேன்.

இங்கு அவசியம் ஒரு Disclaimer கொடுத்தே தீர வேண்டும். ஏனெனில் பங்குச்சந்தையை 100% சரியாக கணிப்பது யாராலுமே முடியாத காரியம். சில கணிப்புகளின் அடிப்படையில் விலை உயரும் என்று நான் நம்புகிற/அல்லது பரவலாக நம்பப்படுகிற பங்குகளை தான், நான் இங்கு பரிந்துரை செய்யப் போகிறேன். அதே சமயம் சொல்லப்படுகின்ற உயர்வை இந்தப் பங்குகள் அடையாமலும் போகலாம். இங்கு சொல்லப்படும் பங்குகள் நீண்டகால முதலீட்டிற்கு உகந்த பங்குகளாகத் தான் இருக்கும். குறுகிய காலத்தில் நடக்கும் ஏற்றத் தாழ்வுகளை பற்றி கவலைப்படாமல் இருக்கும் முதலீட்டாள்கள் மட்டும் இந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

IDFC - INFRASTRCUTURE DEVELOPMENT AND FINANCE CORPORATION

இந்த ஆண்டு ஜூலை மாதம் IPO வந்த இந்தப் பங்குகளின், தற்போதைய விலை ரூ 71 . IPO விலையில் இருந்து தற்போதைய விலையை ஒப்பிடும் பொழுது முதலீட்டாளர்களுக்கு இந்தப் பங்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. ஏற்கனவே இந்தப் பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர்கள் அதனை கெட்டியாக பிடித்துக் கொள்ளலாம்.

ஏன் இந்தப் பங்குகளை வாங்கலாம் ?

IDFC நிறுவனம் நாட்டின் உள்கட்டமைப்பு தேவைகளுக்கு கடன் கொடுக்கும் நிறுவனம். குறிப்பாக மின் உற்பத்தி, தொலைத்தொடர்பு, சாலைகள் போன்றவற்றுக்கு கடன் கொடுக்கும் முக்கிய நிறுவனமாக உள்ளது.

நாட்டின் பெருகிவரும் உள்கட்டமைப்பு தேவைகள் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். 2005ம் ஆண்டில் இந் நிறுவனம் நாட்டின் உள்கட்டமைப்பு கடன் தேவைகளில் 25% கடன் வழங்கியுள்ளது.

அது சரி.. கடன் கொடுக்கும் நிறுவனமாயிற்றே, கொடுக்கும் கடன் சரியாக வசூல் செய்யாவிட்டால் பிரச்சனை தானே ?

Non performing assets (NPA) என்பது திருப்பி செலுத்தப்படாத, நிலுவையில் நிற்கும் கடன். இந்தியாவில் உள்ள நிதி மற்றும் வங்கிகளின் முக்கிய பிரச்சனையே இந்த நிலுவையில் இருக்கும் கடன் தொகை தான். பல வங்கிப் பங்குகளை விட HDFC பங்குகள் மட்டும் எகிறிக் கொண்டே இருக்கிறதே எப்படி ? மிகவும் குறைவான NPA இருக்கும் வங்கிகளில் HDFC முக்கியமான நிறுவனம். அதாவது HDFC தான் கொடுத்த கடனை ஒழுங்காக வசூலித்து விடுகிறது. IDFC யும் அது போலத் தான். IDFCக்கும் அந்தப் பிரச்சனை இல்லை.

இந்தியப் பொருளாதாரம் வளர வேண்டுமானால், உள்கட்டமைப்பு பெருக வேண்டும், உள்கட்டமைப்பு பெருகினால் IDFC மற்றும் இது போன்ற வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வளரும். இந்த நிறுவனங்கள் உயர்ந்தால், அந்தப் பங்குகளை வாங்கும் நாமும் உயர்வோம்.

6 மறுமொழிகள்:

Anonymous said...

Good recommendation. Pl.continue such recommendations.

nEsamudan
Venkatesh R

1:09 AM, October 03, 2005
வெட்டிப்பயல் said...

தவறாக நினைத்து கொள்ள வேண்டாம்...

IDFC லிஸ்டான அன்று நான் விற்ற விலை 71. இன்னும் அதே விலையில் தான் இருக்கிறது :-(. (கிட்ட திட்ட இரண்டு வருடங்களாகியும்)

5:29 PM, August 11, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

வெட்டிப்பயல்,

இது 2005ல் எழுதப்பட்ட பதிவு...

ப்ளாக்கரில் இருந்து சொந்த தளத்திற்கு மாற்றியதால் இது தமிழ்மணத்தில் தற்பொழுது தெரிகிறது

இந்தப் பங்கு எதிர்பார்க்கப்பட்ட லாபத்தைக் கொடுக்கவில்லை என்பது உண்மையே

சமீபத்தில் சற்று ஏறியதாக ஞாபகம். நானும் இந்தப் பங்குகளை வாங்கி பிறகு விற்று விட்டேன். பெரிய லாபம் எதுவும் இல்லை

5:40 PM, August 11, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

இந்தப் பங்குகளின் தற்போதைய விலை - ரூபாய் 124.15

http://in.finance.yahoo.com/q?s=IDFC.NS

பிற பங்குகளை ஒப்பிடும் பொழுது பெரும் லாபத்தை கொடுக்கவில்லை என்றாலும் பாதகமில்லை

5:52 PM, August 11, 2007
வெட்டிப்பயல் said...

//தமிழ் சசி/Tamil Sasi said...

வெட்டிப்பயல்,

இது 2005ல் எழுதப்பட்ட பதிவு...

ப்ளாக்கரில் இருந்து சொந்த தளத்திற்கு மாற்றியதால் இது தமிழ்மணத்தில் தற்பொழுது தெரிகிறது

இந்தப் பங்கு எதிர்பார்க்கப்பட்ட லாபத்தைக் கொடுக்கவில்லை என்பது உண்மையே

சமீபத்தில் சற்று ஏறியதாக ஞாபகம். நானும் இந்தப் பங்குகளை வாங்கி பிறகு விற்று விட்டேன். பெரிய லாபம் எதுவும் இல்லை //

ஆஹா,
மன்னிக்கவும். நான் சரியா பார்க்கல :-(

இப்ப 124 போறதுக்கூட ஓரளவு நல்ல ரேட் தான்...

நான் 34க்கு IPOல வாங்கினேனு நினைக்கிறேன். அப்பவெல்லாம் லிஸ்ட் ஆகற அப்பவே 100% லாபம் கிடைக்கும். IPO நமக்கு அலாட் ஆகறதே பெரிய விஷயமா இருந்துச்சு. இப்ப நிலைமை தெரியல :-(

7:46 PM, August 11, 2007
மங்களூர் சிவா said...

நான்கூட பதிவு எழுதின டேட் கவனிக்கல தமிழ்மணத்தில இருந்துதான் வரேன்.

உங்க சொந்த தள முகவரி என்ன?

THINK BIG

1:14 AM, September 29, 2007